பொது செய்தி

தமிழ்நாடு

சிறுகுறு நிறுவனங்களை காக்க கொ.ம.தே.க., வேண்டுகோள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஈரோடு: 'சிறு, குறு நிறுவனங்களை காக்கும் வகையிலான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட வேண்டும்' என, கொ.ம.தே.க., பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
ஈரோட்டில், அவர் வெளியிட்ட அறிக்கை: ஊரடங்கு உத்தரவு மூலம் சிறு, குறு தொழில் நடத்துவோரும், அவர்களை சார்ந்த தொழிலாளர்களும் அதிகப்படியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஊரடங்கு காலம் முடிந்த பின்னால், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளது. சிறு, குறு உற்பத்தி தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை, அன்றாடம் உழைப்பின் மூலம் வருவாய் ஈட்டி, குடும்பத்தையும், தொழிலையும் சமாளிப்பதுடன், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குகின்றனர். ஊரடங்கு உத்தரவு முடிந்து தொழில் நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தியை துவங்க வேண்டும் என்றால், அரசின் நிதியுதவி இல்லாமல் தொடர முடியாது. இந்தியாவின், 30 சதவீத மக்கள், இதுபோன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக உள்ளனர். இந்நிறுவனங்கள் தொடங்கப்படவில்லை என்றால், பல கோடி பேர் இந்தியாவில் வேலை இழப்பர். இதுவரை வந்த அரசின் எந்த அறிவிப்பும், சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்றுவதாக இல்லை. எந்த அறிவிப்பும் வராத நிலையில், இவர்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவு மூலம் வீடுகளில் இருந்தாலும், நிம்மதி இன்றி உள்ளனர். இதை அரசு புரிந்து, சிறு, குறு நிறுவனங்களுக்கு உடனடியாக நிதி தேவையை புரிந்து, அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X