பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளை தாக்கும் போலீசாருக்கு கண்டனம்: காய்கறி, கீரை விலைகள் உயரும் என ஆதங்கம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஈரோடு: 'தமிழகத்தில் போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதாலும், விவசாயிகளை தாக்குவதாலும், காய்கறி, கீரை விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் உட்பட பல்வேறு விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வந்துவிட்டு, ஊர் திரும்பும் விவசாயிகளை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள போலீசார், தாக்கி உள்ளனர். உயிர் காக்கும் வகையில், அத்தியாவசிய பொருள் என்ற நிலையிலும், காய்கறி, கீரை போன்றவைகளை உரிய நாளில் பறிக்காவிட்டால், அவை வீணாகிப்போகும் என்பதை போலீசார் உணரவில்லை. போலீசாரின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். காய்கறிகள் அத்தியாவசிய பொருட்களில் உள்ளதாக அரசு கூறுகிறது. அவற்றை சந்தைக்கு கொண்டு வரும்படியும், உழவர் சந்தையில் விற்கவும் அரசு அழைப்பு விடுக்கிறது. இதன்படி வரும் விவசாயிகளை கண்மூடித்தனமாக போலீசார் தாக்கினால், மக்களுக்கு காய்கறி, கீரை போன்றவை கிடைக்காமல் போகும். இயற்கை தட்டுப்பாடு, செயற்கை தட்டுப்பாட்டால், அவற்றின் விலை பல மடங்காக உயரும். எனவே, தினசரி காய்கறி சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகள், சிறு, குறு வியாபாரிகள், மளிகைக்கடைக்காரர்களை போலீசார், கருணையுடன் அணுக வேண்டும். தேவையின்றி ஊர் சுற்றுபவர்களை போலீசார் கண்டிக்கலாம். சாதாரண மக்களையும், விவசாயிகளையும் தாக்குவதை போலீசார் நிறுத்திக் கொள்ள வேண்டும், என கேட்டுக் கொண்டார். இதுபோல, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X