பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : மார் 27, 2020
Share
Advertisement

சுகாதார வளாக கட்டடம் வீண்: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, எச்.புதுப்பட்டி பஞ்.,ல், 12 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த, 2011 - 12ல், புதுப்பிக்கப்பட்டது. சுகாதார வளாகத்தை முறையாக, பராமரிக்க பஞ்., நிர்வாகம் ஆர்வம் காட்டாததால், தற்போது, பயன்பாடின்றி உள்ளது. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலையுள்ளது. எனவே, சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
தேங்கும் குப்பையை அள்ள மனமில்லை: தர்மபுரி பைபாஸ் சாலையில் இருந்து, ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல தார்ச்சாலை உள்ளது. தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட இச்சாலையில், ஓட்டல், பேக்கரி, டீ, பேன்சி, புக் ஸ்டோர் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இவர்கள், தங்களது கடைகளில் சேகரிக்கும் குப்பையை, சாலையோரத்தில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டுகின்றனர். இது நிரம்பி வழிந்தாலும், நகராட்சி ஊழியர்கள் இதை அள்ளுவதில்லை. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

சேவை மையம் திறக்க வேண்டும்: நாகதாசம்பட்டியில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், சேவை மையம் கட்டப்பட்டது. இதில், பட்டா, சிட்டா வழங்குதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், ஆதார் கார்டில் திருத்தம், வருமானம், ஜாதி இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை, பொதுமக்கள் எளிதில் பெற, இந்த மையம் கட்டப்பட்டது. இது திறக்காமல் உள்ளதால், இவ்வாறான சேவைகளை பெற, இப்பகுதி மக்கள் பென்னாகரம் தாலுகா அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர்.

ஜல்லி பெயர்ந்த சாலையால் அவதி: நல்லம்பள்ளி அடுத்த ஜருகு சாலையில் இருந்து, பூவல்மடுவு வரை, 4 கி.மீ., தூரத்துக்கு தார்ச்சாலை உள்ளது. பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்று உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பூவல்மடுவு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அவதிப்பட்டு வருகின்றனர். இச்சாலையை சீரமைக்கக்கோரி, அதிகாரிகளுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X