பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடுகளிலிருந்து வந்தோரை அறிய வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தீவிரம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

தர்மபுரி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து தர்மபுரி மாவட்டத்துக்கு வந்துள்ளவர்களை எளிதில் கண்டறிய, அவர்களது வீடுகளில், உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் வருவாய்த்துறையினர், ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு, நாடு முழுவதும் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தர்மபுரி மாவட்டம் வந்தவர்களை கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ததில், 69 பேர், தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதில், 28 நாட்கள் கடந்து, 22 பேர், நல்ல நிலையில் உள்ளனர். 47 பேர் தனிமை படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதில், 19 பேர் சீனாவில் இருந்து, தர்மபுரி மாவட்டத்துக்கு வந்தவர்கள். வீடு திரும்பியவர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை, கொரோனா தொடர்பாக எளிதில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, அவர்கள் தங்கியுள்ள வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்ட, உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறையினருக்கு, மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டன. இதையடுத்து, நேற்று தடங்கம் பஞ்., சவுளுப்பட்டியில், வெளிநாடு, வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களின் விபரங்களை பஞ்., செயலர் கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ., ராமசுந்தரம் தலைமையிலான குழுவினர், அப்பகுதி பஞ்., மக்கள் பிரதிநிதிகளுடன் சென்று கண்டறிந்து, அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டினர். இதே போன்று, மாவட்டம் முழுவதும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின், வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நேற்று நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X