பொது செய்தி

தமிழ்நாடு

வாணியாற்றின் குறுக்கே பாலம் கட்ட வலியுறுத்தல்

Added : மார் 27, 2020
Share
Advertisement

அரூர்: அரூர் அருகே, வாணியாற்றின் குறுக்கே, பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேப்பநத்தம், மேலானூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கீழானூர் அருகே, செல்லும் வாணியாற்றை கடந்து தீர்த்தமலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், ஆற்றை கடக்க முடியாத நிலை உள்ளதால், வாணியாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: எச்.ஈச்சம்பாடி, கீழ்மொரப்பூர், கே.வேட்ரப்பட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தற்போது, தீர்த்தமலைக்கு அரூர் வழியாக, சென்று வருகின்றனர். ஆனால், ஈச்சம்பாடியில் இருந்து, வேப்பநத்தம் வழியாக, கீழானூர் வாணியாற்றை கடந்து சென்றால், 15 கி.மீ., தூரம் குறைவதுடன், விரைவாக தீர்த்தமலைக்கு சென்று விடலாம். மேலும், கீழானூர் பகுதியிலிருந்து கே.வேட்ரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் மழைக்காலங்களில் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலையுள்ளது. எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, வாணியாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X