அரூர்: கொரோனா தொற்றிலிருந்து மக்கள் உயிரை பாதுகாக்க, நாடு முழுவதும் ஏப்., 14 இரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், அரூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உள்ளிட்ட, 250 பேருக்கு, அழகு அரூர் அறக்கட்டளை சார்பில், நேற்று மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், வரும் ஏப்., 14 வரை உணவு வழங்கப்படும் என, அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE