பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளியை கடைப்பிடித்த மக்கள்

Added : மார் 27, 2020
Share
Advertisement
அரூர்: அரூரில், மருந்து கடைகளில் ஒரு மீட்டர் சமூக இடைவெளி விட்டு, மருந்து, மாத்திரைகளை மக்கள் வாங்கிச்சென்றனர். கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க, நாடு முழுவதும், கடந்த, 24 நள்ளிரவு, 12:00 மணி முதல், ஏப்., 14 இரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்தார். மேலும், தமிழகத்தில், கொரோனா வைரஸ்

அரூர்: அரூரில், மருந்து கடைகளில் ஒரு மீட்டர் சமூக இடைவெளி விட்டு, மருந்து, மாத்திரைகளை மக்கள் வாங்கிச்சென்றனர். கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க, நாடு முழுவதும், கடந்த, 24 நள்ளிரவு, 12:00 மணி முதல், ஏப்., 14 இரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்தார். மேலும், தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, 144 தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். இதையேற்று, தர்மபுரி மாவட்டம், அரூரில், கச்சேரிமேடு, பஸ் ஸ்டாண்ட், சந்தைமேடு உள்ளிட்ட இடங்களில் உள்ள மருந்து கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், ஒரு மீட்டர் தூரத்தில், மக்கள் வரிசையில் நின்று, மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கிச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X