வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப முண்டியடித்த வாகன ஓட்டிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப முண்டியடித்த வாகன ஓட்டிகள்

Added : மார் 27, 2020
Share

தர்மபுரி: தர்மபுரியில், ஒரு மணி நேரம் மட்டுமே நேற்று திறக்கப்பட்ட பெட்ரோல் பங்க்குகளில், தங்களது வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப, வாகன ஓட்டிகள் முண்டியடித்தனர்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, 144 மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால், தேவையில்லாமல் வெளியே வருவோர், பைக்குகளில் ஊர் சுற்றுவோர் உள்ளிட்டோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சிலர், போலீசாரின் நடவடிக்கையை பொருட்படுத்தாமல், ஊர் சுற்றுதல், வெறிச்சோடிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் சாலைகளில் செல்பி எடுத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள், வெளியே வராமல் தடுக்க, அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் அடைக்க, நேற்று முன்தினம் இரவு, அரசு உத்தரவிட்டது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு, அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் அடைக்கப்பட்டன. காலையில், தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகள், இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின், 11:00 மணிக்கு, அத்தியாவசிய தேவையாளர்களான மருத்துவர்கள், போலீஸ் மற்றும் தூய்மை பணியாளர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப, ஒரு மணி நேரம் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. இதை கண்ட வாகன ஓட்டிகள் ஏராளமானோர், பெட்ரோல் பங்க்குகளில் குவிந்தனர். மேலும், ஒருவருக்கொருவர் முண்டியடித்து, பெட்ரோல் நிரப்பிச்சென்றனர். பின், 12:00 மணிக்கு மீண்டும் அடைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X