பொது செய்தி

தமிழ்நாடு

முழுமையான ஊரடங்கு: கிராம மக்கள் முடிவு

Added : மார் 27, 2020
Share
Advertisement

அரூர்: அரூர் அருகே, ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என, கிராம மக்கள் ஒருமனதாக முடிவு செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடி பஞ்.,ல், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க, நாடு முழுவதும், 24 நள்ளிரவு, 12:00 மணி முதல், ஏப்., 14 இரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும், தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, 144 தடை அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் தெரிவித்தார். இதையேற்று, தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடி பஞ்., கிராம மக்கள் காலை, 6:00 முதல், 9:00 மணி வரையும், மாலையில், 4:30 முதல், 6:00 மணி வரை மட்டும், மளிகை, காய்கறி கடைகள் திறக்க வேண்டும். இதில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க, 2 மீட்டர் தூரத்தில், சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், சந்துக்கடைகளில் மது விற்பனை செய்யக்கூடாது எனவும், இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பஞ்., தலைவர் கிருபாகரன், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, அனைத்து கரும்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாளர் திருமலை, ஊர்கவுண்டர் முருகன் ஆகியோர், ஊரடங்கு உத்தரவு குறித்து விளக்கினர். பஞ்., நிர்வாகம் சார்பில், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X