பொது செய்தி

தமிழ்நாடு

144 தடை உத்தரவை அமல்படுத்த போலீசார் தீவிரம்: 66 பேர் கைது

Added : மார் 27, 2020
Share
Advertisement

தர்மபுரி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள, 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். தர்மபுரியில் இதுவரை, தடை உத்தரவை மீறிய, 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில், 144 தடை மற்றும் மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், தர்மபுரி நகர் உட்பட மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், பஸ் சேவை உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நகரில் உள்ள கடைகள் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. இதே போன்று, தர்மபுரியில் உள்ள நகர் மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்டுகளும் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வைரஸ் பரவலை தடுக்க, மக்கள் தங்கள் வீட்டில் இருக்க, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், பல கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஊரடங்கால் வெறிச்சோடி உள்ள நகர் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளை மொபைல் போனில் போட்டோ, வீடியோ எடுக்க பைக்குகளில் சுற்றி வருகின்றனர். 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்த போலீசார், முக்கிய சாலைகளில் தடுப்பு அமைத்துள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வருபவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியது தொடர்பாக, 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 66 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 58 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிராம பகுதிகளில் உள்ளவர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் ரோந்து சென்று, எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X