திறந்த நிலையில் உள்ள கிணற்றுக்கு கம்பிவேலி அமைக்க வேண்டுகோள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

தர்மபுரி: அளே தர்மபுரியில், குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தர்மபுரி அடுத்த, அளே தர்மபுரியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில், சின்னதோப்பு தெருவில் உள்ள பழைய பொதுக்கிணற்றை, இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சில மாதத்துக்கு முன், தூர்வாரி தூய்மை படுத்தினர். இதனால், தற்போது இந்த கிணற்றில், 30 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதிலுள்ள நீரை, இங்குள்ள மக்கள் அருகில் உள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் நிரப்பி, பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கிணற்றில் குப்பை, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை சிலர் கொட்டி, தண்ணீரை மாசுபடுத்தி வருகின்றனர். மேலும் இது, குடியிருப்பு பகுதியில் திறந்தநிலையில் உள்ளதால், குழந்தைகள் மற்றும் பள்ளி சிறுவர்கள் எட்டிப்பார்க்கும் போது, தவறி விழும் நிலை உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், இதன்மேல் கம்பிவேலி அமைத்து, தண்ணீரின் தூய்மையை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X