பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அரசு பஸ் நின்று செல்ல உத்தரவு

Added : மார் 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், அரசு பஸ்கள் நின்று செல்ல பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பைபாஸ் சாலை அருகில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு, எந்த அரசு புறநகர் பஸ்களும் நிற்பதில்லை. எனவே, இங்கு சாதாரண கட்டணம் வசூலிக்கும் அரசு புறநகர் பஸ்கள் அனைத்தும், நின்று செல்ல வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் பாலகாந்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். மனுவை பரிசீலனை செய்த, அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து, காவேரிப்பட்டணம் வழியாக செல்லும் அனைத்து சாதாரண கட்டண புறநகர் பஸ்களும், காவேரிப்பட்டணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நின்று செல்ல வேண்டும். இது குறித்து கிளை மேலாளர்கள், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். அத்துடன் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனரா என்பதை பரிசோதகர்கள் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு நிற்காத பஸ் ஓட்டுனர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கிளை மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X