பொது செய்தி

தமிழ்நாடு

மின் மோட்டார் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்தில், மின் மோட்டார் மூலம், கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு, கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்தில், மின் மோட்டார் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி பி.டி.ஓ., அலுவலகம், கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகளில், இந்த கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இது குறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பெரியசாமி கூறுகையில், ''மாவட்டத்திலுள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், மின்மோட்டார் மூலம், கிருமி நாசினி தெளிக்க, 100 மின் மோட்டார் கிருமிநாசினி தெளிப்பு இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன,'' என்றார். நிகழ்ச்சியின் போது, பி.டி.ஓ.,க்கள் பானுப்பிரியா, உமாமகேஸ்வரி, பஞ்., தலைவர் காயத்ரி கோவிந்தராஜ், துணைத்தலைவர் செல்வி பாஸ்கர் உட்பட பலர் உடனிருந்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள், கிருமி நாசினியை தெளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X