பொது செய்தி

இந்தியா

போக்குவரத்து தடைப்பட்டதால் 135 கி.மீ., உணவின்றி நடந்தே சென்ற பரிதாபம்

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

நாக்பூர்: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலானதையடுத்து, பல்வேறு பயண கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மஹாராஷ்டிராவில் 26 வயது கூலித் தொழிலாளி ஒருவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக உணவின்றி 135 கி.மீ தூரம் நடந்தே சென்றுள்ளார்.latest tamil newsகொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலானதையடுத்து, அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் தடைப்பட்டுள்ளன. இதன் காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து, தங்கள் இருப்பிடத்திலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். சிலர் ஊரடங்கு அமலுக்கு முன்பாக கிடைத்த பேருந்தில் கூட்டம் கூட்டமாக கிளம்பினர். சிலர் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். புனேவில் கூலித் தொழிலாளியாக பணிபுரியும் நரேந்திர செல்கேவும் தனது சொந்த ஊரான சந்திராபூர் செல்ல திட்டமிட்டு, புனேவில் இருந்து நாக்பூர் செல்லும் கடைசி ரயிலை பிடிக்க முடிவெடுத்தார்.


latest tamil newsநாடு முழுவதும் ஊரடங்கு அமலானதால், அவர் நாக்பூரிலே சிக்கித் தவித்துள்ளார். சொந்த ஊர் செல்ல வேறு எந்த வழியும் இல்லாததால், நடந்தே செல்ல முடிவெடுத்து, கடந்த 24ம் தேதி சந்திராபூருக்கு நடைப்பயணத்தை தொடங்கினார். இரண்டு நாட்களாக எந்த உணவுகளும் இல்லாமல் நடந்து சென்ற அவர், தண்ணீரை மட்டும் அருந்தி சென்றுள்ளார். இதையடுத்து, 25ம் தேதி, இரவு சிவாஜி சதுக்கம் அருகே சென்றுக்கொண்டிருக்கும் போது, ரோந்து சென்ற போலீசார் நரேந்திர செல்கேவை தடுத்து நிறுத்தினர்.


latest tamil newsபோலீசாரிடம் தனது நிலைமையை எடுத்துக்கூறிய செல்கேவை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்தனர். போலீசார் அவருக்கு உணவு வழங்கியுள்ளனர். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவரை போலீஸ் வாகனத்திலேயே 25 கி.மீ., தொலைவில் உள்ள அவரது ஊருக்கு அழைத்து சென்றனர். எனினும், செல்கேவை 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
27-மார்-202021:27:56 IST Report Abuse
Krishna For Stopping Disease Spread, These Movements Must Have Been Cut Voluntarily Incl. Govt Force and People Must Have Stayed in Their Places. However Proper Disaster Managing Task Force Must be Available in All Villages for providing Basic Facilities to All People inc.Children-Elders (Not Existing Except on Papers-Lectures for Cheating People ). Instead of Giving Home-Rest with VVV Fat Pay to Most Govt Staff, Govt Must Compel All Useless Govt Staff to Work for the People (Otherwise Simply Sack them)
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-மார்-202018:51:17 IST Report Abuse
 nicolethomson அந்த இளைஞனின் உறுதியை பாராட்டுகிறேன் , இவரை போன்றோர் இருந்தால் எனது பண்ணைக்கு அழைத்து உணவு கொடுக்க ஆவண செய்வேன்
Rate this:
Share this comment
Cancel
27-மார்-202017:30:50 IST Report Abuse
ஸாயிப்ரியா இப்படித்தான்,யாரையும் எதையும் மதிக்க மாட்டேன்னு அடம்புடிச்சா சரியா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X