பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் வெளியே வராமல் தடுக்க பேரிகார்டு வைத்து காண்காணிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தடுக்க, கிருஷ்ணகிரி நகர் முழுவதும் பேரிகார்டு அமைத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, தமிழகம் முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும், ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கிருஷ்ணகிரி நகரில் போலீசார், ரவுண்டானாவை சுற்றிலும் பேரிகார்டு அமைத்து, பொதுமக்கள் செல்லாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், பெங்களூரு சாலை, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அண்ணா சிலை, பழையபேட்டை காந்தி சிலை, மீன் மார்க்கெட் போன்ற பகுதிகளிலும் பேரிகார்டு அமைத்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாலைகளை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் விசாரித்து, அவசியம் உள்ளவர்களை மட்டும் சாலையில் செல்ல அனுமதிக்கின்றனர். மற்றவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மேலும், மருந்து கடை, காய்கறி கடை மற்றும் மளிகை கடையின் முன், ஒரு மீட்டருக்கு ஒரு கோடு அமைத்து, அதில் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில், நகர் முழுவதும் ஆட்டோவில் அறிவித்தபடி செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X