பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவிலிருந்து திரும்பிய 120 பேர்; சொந்த ஊருக்கு அனுப்பிய போலீசார்

Added : மார் 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, பொம்மனஹள்ளி, தாவணிகரே, தும்கூர், மைசூரு உள்ளிட்ட பகுதிகளில், கட்டட பணிக்காகவும், கூலிவேலைக்கும் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்வோர் பலர், குடும்பம் குடும்பமாக அங்கேயே தங்கி விடுகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால், வரும், ஏப்.,14 வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலையின்றி, உணவும் கிடைக்காத நிலையில், 120க்கும் மேற்பட்டோர், கர்நாடகாவில் இருந்து, சொந்த ஊருக்குச் செல்ல நேற்று நடந்தே கிருஷ்ணகிரி வந்தனர். இது குறித்து, கலெக்டர் பிரபாகர் மற்றும் மாவட்ட எஸ்.பி., பண்டிகங்காதர் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அவர்களை, அவரவர் சொந்த ஊருக்கு பஸ்சில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அவர்கள் நேற்று மாலை, திருவண்ணாமலை பிரிவு சாலையில், அரசு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பணியை, ஏ.டி.எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி., குமார், டவுன் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் உள்ளிட்டோர் முன்னின்று செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X