பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் பணியை பாராட்டி இனிப்பு வழங்கிய டி.எஸ்.பி.,

Added : மார் 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: இரவு, பகல் பாராமல் பணியாற்றும் போலீசாரை பாராட்டி, டி.எஸ்.பி., இனிப்பு வழங்கினார். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு காரணங்களை கூறி, பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் நகரில் வலம் வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த கடந்த ஒரு வாரமாக போலீசார், பெரு முயற்சி செய்து வருகின்றனர். இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும், விடுமுறை ரத்து செய்யப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அனைத்து போலீசாரும் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பாராட்டி, டி.எஸ்.பி., குமார், கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணத்தில் பணியாற்றி வரும் போலீசார், ஊர்க்காவல் படையினர், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர், ஆகிய, 150 பேருக்கு இனிப்பு, காரம், கை கழுவ சோப்பு ஆகியவற்றை, நேற்று கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதிக்கு அழைத்து வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், டவுன் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X