பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டிலிருந்து வெளியே வரும் ஒருவரால் வீட்டிலுள்ளோர் பாதிப்பு: இன்ஸ்., அறிவுரை

Added : மார் 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: 'வீட்டிலிருந்து ஒருவர் வெளியே வந்தாலும், அவரால் வீட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது' என, பொதுமக்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களிடம் எங்கு செல்கிறீர்கள் என விசாரித்தார். தொடர்ந்து அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் பேசுகையில், ''கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழக்ததில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை செல்வோர் மற்றும் மருந்து வாங்குவோரை தவிர, யாரும் வெளியே வர வேண்டாம். காய்கறிகளையும் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நமக்கெல்லாம் எதுவும் வராது என, அலட்சியமாக ஊர் சுற்றக்கூடாது. ''வரும்முன் காப்பதே சிறந்தது. இந்த வைரஸ் எங்கிருக்கும் என்றே தெரியாத நிலையில், பொதுமக்கள் கூட்டமாக சுற்றி வருவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவருக்கு, பாதிப்பு ஏற்பட்டு, அவர் வீட்டிற்கு சென்றால் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த நோய் தொற்று ஏற்படும். எனவே, மிகவும் அவசியமின்றி யாரும் வெளியே வரவேண்டாம். வெளியே வரும் உங்கள் ஒருவரால், வீட்டில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X