பொது செய்தி

தமிழ்நாடு

தடையால் க.எண்ணெய் விலை உயர்வு

Added : மார் 27, 2020
Share
Advertisement

சேலம்: தமிழகத்தின் தேனி, சேலம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து, நிலக்கடலை விற்பனைக்கு வருகிறது. அதே மாவட்டங்களில் நிலக்கடலையை மூலப்பொருளாக பயன் படுத்தி தயார் செய்யப்படும் கடலை எண்ணெய்யை உற்பத்தி செய்யும் ஆலைகளும் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச், 22ல் தமிழகம் முழுவதும், ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து வெளி மாவட்ட வாகனங்கள் தமிழகத்துக்கு வர தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எண்ணெய் ஆலைகள் இயங்க பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக கடலை எண்ணெய் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது. தமிழகத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வரவும், மாவட்டத்தை விட்டு பிற மாவட்டங்களுக்கு செல்லவும் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலை எண்ணெய் வரத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதால், நேற்று முன்தினம் ஒரே நாளில் லிட்டருக்கு, 12 ரூபாய் உயர்ந்தது. உள்ளூர் தயாரிப்பு கடலை எண்ணெய் லிட்டர், 140 ரூபாய்க்கு விற்றது, 152 ரூபாயாவும், பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் கடலை எண்ணெய், லிட்டர் 150 ரூபாய்க்கு விற்றது, 162 ரூபாயாக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X