பொது செய்தி

தமிழ்நாடு

பணிக்கு அழைப்பு; ஊழியர்கள் அதிருப்தி

Added : மார் 27, 2020
Share
Advertisement

சேலம்: 'கொரோனா வைரஸ்' பரவலை தடுக்க, தமிழகம் முழுவதும், 144 தடை உத்தரவு அமலான நிலையில், போலீஸ், சுகாதாரம், தீயணைப்பு, வருவாய் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளை தவிர்த்து, பிற துறைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு, நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், நேற்று முதல், பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து செயல்படுத்த, ஊழியர்களை பணிபுரிய, உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து, பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் கூறியதாவது: பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும் நிலையில், நிலம் வாங்க, விற்க, பத்திரப்பதிவுக்கு, அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் மட்டுமின்றி, வெளி மாவட்டம், வெளிநாடு வாழ் இந்தியர் வருவர். பத்திரத்தை பதிவு செய்ய, குறைந்தபட்சம், 10 முதல், 15 பேர் வரை, கூட வருவர். தடை உத்தரவுப்படி, ஐந்து பேருக்கு மேல், ஓர் இடத்தில் கூடக்கூடாது என்பது விதி. அதனால், பத்திரப்பதிவு அலுவலகங்களில் விதிமீறலுக்கு வாய்ப்புள்ளது. போதிய இடைவெளி தேவை என தெரிவிக்கப்படும் நிலையில், கைரேகை பதிவின்போது, ஊழியர்கள் மக்களுடன் நெருக்கமாகவும், தொடும் நிலையும் ஏற்படுகிறது. அதனால், பத்திரப்பதிவு அலுவலர் நலன்கருதி, அலுவலகங்களை செயல்படுத்த, ஊழியர்கள் பணிக்கு அழைக்க, தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X