பொது செய்தி

தமிழ்நாடு

தவறான தகவல் பரவல்: சமூக வலைதளத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

Added : மார் 27, 2020
Share
Advertisement

சேலம்: 'கொரோனா வைரஸ்' குறித்து, தவறான தகவல் பரப்பப்படுவதால், வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகை உலுக்கும், 'கொரோனா' உயிர் கொல்லி நோயை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. தமிழகத்தில், 'கொரோனா'வால் உயிரிழப்பு ஒன்று, அதன் பாதிப்பு, 26 ஆக உள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால், வாட்ஸ்ஆப் குழு, பேஸ்புக்கில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்து, தவறான தகவல் பரப்பப்படுகிறது. மதுரையில் மட்டும், இந்த நோய்க்கு ஒருவர் பலியான நிலையில், நேற்று, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், சென்னையில் தலா ஒருவர் பலியானதாக, பேஸ்புக்கில் தவறான தகவல் பரவியது. இத்தகவல் பரவியதும், தமிழக சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார், தகவல் பரப்பியவர்களை கண்காணித்து எச்சரித்ததால், உடனடியாக பேஸ்புக்கில் இருந்தும் நீக்கப்பட்டன. அதேபோல், மாநிலம் முழுவதும், பேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் தவறான தகவல் பரப்புபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, அந்தந்த மாவட்ட, மாநகர போலீசின் சமூக ஊடகப்பிரிவுக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில், '144' தடை உத்தரவு அமலான நிலையில், சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புபவரை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதால், போலீசாரின் பணி மேலும் அதிகரிக்கிறது. இதனால், 'கொரோனா' கட்டுக்குள் வரும் வரை, நாடு முழுவதும் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களை முடக்க, உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.

போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், 'தவறான தகவல் பரப்புவதால், மக்கள் இடையே, தேவையற்ற குழப்பம், பீதி ஏற்படுகிறது. சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்தாலும், கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், கொரோனா கட்டுக்குள் வரும் வரை, வாட்ஸ்ஆப், பேஸ்புக்கை தடைசெய்ய, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X