பொது செய்தி

இந்தியா

சுய தனிமைப்படுத்தலில் பிரபலங்கள் என்ன செய்கின்றனர்?

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Amitabh, Salman, UsainBolt, LeoMessi, Quarantine, SpendingTime, CoronaVirus, அமிதாப், சல்மான், உசைன்போல்ட், மெஸ்சி, தனிமைப்படுத்தல், கொரோனா வைரஸ்

புதுடில்லி: கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. தற்போது வரை இத்தொற்றால் 5,32,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 24,087 எனப் பதிவாகியுள்ளது. பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சி இத்தாலி முதலிடத்திலும், ஸ்பெயின் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சீனாவில் பலி எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியதற்கு முக்கிய காரணம் சமூக விலகல், சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது தான் எனச் சீனா கூறியுள்ளது.


latest tamil news


இந்திய மக்களிடையே காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி மக்கள் அனைவரும் 21 நாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் பாலிவூட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், சுய ஊரடங்கில் தன் குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருவதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடற்பயிற்சி செய்து எப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கும் சல்மான் இந்த சமயத்தில் தனக்கு பிடித்தமான ஓவியங்கள் வரைந்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர்கள் கத்ரீனா கைப், ரகுல் ப்ரீத் சிங், தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தத்தம் இன்ஸ்டா பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.


latest tamil news


ஹாலிவுட் கலைஞர்கள் ஜெசிக்கா அல்பா, ஜுலியா ராமர்ட்ஸ் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டதோடு, தனிமைப்படுத்தப்பட்ட இச்சமயத்தில் மேக்-அப் இல்லாமல் இருக்கும் தங்கள் படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் விளையாட்டு வீரர்களான மெஸ்ஸி, உசேன் போல்ட் உள்ளிட்டோர் டிஸ்யு பேப்பரை கீழே விழாமல் தங்கள் கால்களால் தட்டி விளையாடி வருவது பிரபலமடைந்துள்ளது. இன்னும் பலரும் பல விதமாக இந்த சுய தனிமைப்படுத்துதல் நேரத்தில் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களைச் செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடும்போது தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவளிப்பது, குழந்தைகளுடன் அறிவியல் சார்ந்த விளையாட்டில் ஈடுபடுவது, புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது குடும்பத்திற்கு நல்லது என மருத்துவர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
27-மார்-202015:25:03 IST Report Abuse
வெகுளி இங்கன ஒரு பிரபலம் துண்டுசீட்டுல எழுத்து கூட்டி தமிழ் படிச்சு பழகிட்டு இருக்கார்.... அப்பால நூறுவரை கூட்டல் கழித்தல் மனக்கணக்கா சொல்லணும்ன்னு கிஷோர் சொல்லிருக்கார்.....
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
27-மார்-202015:03:11 IST Report Abuse
kumzi நம்ம சுடலை கான் மூர்க்கனின் வாக்குகளை நம்பி கனவில் மூழ்கி இருப்பான்
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
27-மார்-202015:38:46 IST Report Abuse
selvaகேப்பை...
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
27-மார்-202014:04:03 IST Report Abuse
தாண்டவக்கோன் ""முந்தாநேத்து"" சமூக ஆர்வலர்களுங்க என்னெத்தெ செய்யிதுங்கன்னு போட்டீங்கன்னா அதுங்கல்லாம் யாருன்னு தெரிஞ்சிக்கெலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X