பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.ஹெச்.,ல் முதியோர் வெளிநோயாளிகள் பிரிவு இயக்கம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் நகராட்சிக்குட்பட்ட சணப்பிரட்டி காந்திகிராமத்தில், 17.45 ஏக்கரில், 269 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே, இயல்கூடம், நிர்வாக கட்டடம், மாணவ மற்றும் மாணவியர் தங்கும் விடுதிகள், முதல்வர் குடியிருப்பு, மருத்துவ ஆசிரியர்கள் குடியிருப்பு, செவிலியர் விடுதி உட்பட பல்வேறு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தற்போது, 150 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தொடர்ந்து, கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணி முடிவடைந்த நிலையில், கடந்த, 5 ல் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தற்போது பழைய அரசு மருத்துவமனையில் இயங்கி வந்த வெளிநோயாளிகள் பிரிவு, தோல் நோய் சிகிச்சை, மார்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான சிகிச்சை, தொழிலாளர் வார்டு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, பொது அவசர சிகிச்சை பிரிவு, காசநோயாளிகள் பிரிவு, மன நோயாளிகள் பிரிவு, பொது அறுவைச் சிகிச்சை உட்பட பல்வேறு பிரிவுகள் மாற்றப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மருத்துவ கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா கூறியதாவது: மருத்துவமனை மாற்றும் பணி, படிப்படியாக நடந்து வருகிறது.அதில், 60 சதவீதம் பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன. பழைய மருத்துவமனையில், தேசிய சுகாதார இயக்கத்தின் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவும், எலும்பு சம்பந்தமான நோய்கள் பிரிவு, கண் புரை நோய் சிகிச்சை பிரிவுகள் இயங்கும். புதிய மருத்துவமனையில், 7வது மாடியில் கொரோனா வைரஸ் சிகிச்சை சிறப்பு பிரிவு இயங்கி வருகிறது.இங்கு, முதியவர்கள் வந்து சிகிச்சை பெற்றால், அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காது. அதை கருத்தில் கொண்டு, முதியவர்களுக்கு மட்டும் வெளி நோயாளிகள் பிரிவு பழைய மருத்துவமனையில் செயல்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X