தமிழ்நாடு

தூய்மை பணியாளர்கள் உணவு கிடைக்காமல் அவதி: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

கரூர்: ஊரை தூய்மை செய்யும் பணியாளர்கள், உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், 80 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, 48 வார்டுகள், ஒன்பது துப்புரவு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களில் தினந்தோறும் துப்புரவு பணி செய்வதற்காக, 200 நிரந்தர பணியாளர்கள், 450 தனியார் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம், 650 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில், ஈடுபட்டுள்ளனர். ஆனால், இவர்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கந்தசாமி கூறியதாவது: கடந்த, 20 நாட்களுக்கு மேலாக, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தூய்மை பணியாளர்கள் இடைவிடாது ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் காலை, 5:30 முதல், 10:30 மணி வரை, பகல், 2:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, பணிபுரிந்து வருகின்றனர். கொடுமுடி, நொய்யல், வேலாயுதம்பாளையம், மின்னாம்பள்ளி, பழையஜெயங்கொண்டம் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து வந்து, ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பஸ் வசதி இல்லாமல் வேலைக்கு வருவது திண்டாட்டமாக உள்ளது. இவர்களுக்கு, போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை. காலை முதல் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு, உணவு வழங்க நகராட்சி ஏற்பாடு செய்யப்படவில்லை. வேலை செய்யும் இடங்களில் உள்ள உணவகங்கள், மூடி கிடப்பதால் வெளியிலும் சாப்பாடு வாங்க முடியவில்லை. தொடர்ந்து உணவு அருந்தாமல் வேலை செய்வதால், மயக்கம் ஏற்படுகிறது. பல்வேறு பகுதிகளில், மனிதாபிமானமுள்ள மக்கள் அளிக்கும் உணவுகளை நம்பியே பணிபுரிகின்றனர்.

போலீஸ் உட்பட மற்ற துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு, அந்தந்த துறை அதிகாரிகள் உணவு ஏற்பாடு செய்து விடுகின்றனர். ஆனால், வீதி வீதியாக சென்று தூய்மை பணி செய்யும் பணியாளர்களை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இனியாவது, நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் அம்மா உணவகங்கள் வாயிலாக, சாப்பாட்டு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சில பணியாளர்களுக்கு அடையாள அட்டை இல்லாததால், போலீஸ் கெடுபிடியில் சிக்கி தவிக்கின்றனர். ''தூய்மை பணியாளர்களுக்கு, உணவு கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும்,'' என்று நகராட்சி கமிஷனர் சுதா தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X