பொது செய்தி

தமிழ்நாடு

பேரூரில் கொரோனாவை கட்டுபடுத்திட நான்கு முக்கிய சாலைகள் அடைப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

குளித்தலை: கேரளாவில் பணிபுரிந்து வந்த கட்டுமான தொழிலாளர்கள், குளித்தலை அருகே பேரூருக்கு திரும்பி வந்தனர். அவர்கள் வீட்டு காவலில் கண்காணிக்கப்படுகின்றனர். வெளியூர் மக்கள், தங்கள் கிராமத்திற்கு வரவேண்டாம் என்பதை வலியுறுத்தி, பொது மக்கள் சாலையை அடைத்து உள்ளனர். குளித்தலை அடுத்த, கூடலூர் பஞ்., மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், கேரளா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிறகு, கடந்த வாரம் ஊருக்கு திரும்பி வந்தனர். இவர்கள், குளித்தலை ரயில் நிலையத்தில் இறங்கியதும், மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். வீட்டில் உள்ளவர்களையும், தொழிலாளர்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, தோகைமலை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி தியாகராஜன் தலைமையில், மருத்துவ குழுவினர் தொடர் மருத்துவ முகாம் நடத்தினர். தொடர்ந்து, 129 தொழிலாளர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்திட, 144 ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், வெளியூர் மக்கள் கிராமத்திற்கு வந்து செல்கின்றனர். பொது மக்கள் நலன் கருதி, பணிக்கம்பட்டி தோகைமலை சாலை, தேசிய மங்கலம் திருச்சி சாலை, உள்ளிட்ட பேரூர் கிராமத்திற்கு வரும், முக்கிய நான்கு சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X