பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : மார் 27, 2020
Share
Advertisement

சேதமடைந்த சுவிட்ச் போர்டு: கிருஷ்ணராயபுரம் அடுத்த வேங்காம்பட்டி கடைவீதி அருகில், போர்வெல் அமைக்கப்பட்டு சின்டெக்ஸ் தொட்டி மூலம் மக்களுக்கு தண்ணீர் ஏற்றி வினியோகம் நடக்கிறது. இந்நிலையில் போர்வெல் மின்மோட்டார் சுவிட்ச் போர்டு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டியில் ஏற்ற முடியாத நிலை உள்ளது. மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை உள்ளது. இதை சரிசெய்ய பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்டாற்று ஏரியில் நாணல் ஆக்கிரமிப்பு: கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி ஏரியில் இருந்து, பிரிந்து செல்லும் பூங்காற்று காட்டாற்று ஏரி, கோட்டமேடு வரை, செல்கிறது. வீரகுமரன்பட்டி பூங்காற்று காட்டாற்று ஏரியில் அதிகமான நாணல்செடிகள் வளர்ந்து வருகின்றன. இந்த செடிகள் காரணமாக மழை காலங்களில் வரும் மழை நீர் முழுவதும் தேங்குகிறது.மேலும் மங்கம்மாள் சாலை அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் வடியும் வடிநீர் வருகிறது. இதனால், சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது. செடிகளை அகற்ற வேண்டும்.

குழாய் உடைந்து குடிநீர் வீண்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து, மதுரை மாவட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீர் பெரிய குழாய் வழியாக கொண்டு செல்லப் படுகிறது. தற்போது பெரிய குழாய் ஏர் வால்வு பாதிப்பு ஏற்படும் போது, குழாய் விரிசல் அடைகிறது. அதன்படி சிந்தலவாடி பகுதியில் குழாய் விரிசல் ஏற்பட்டு, தண்ணீர் வீணாகிறது. பெரிய குழாய் வழியாக தண்ணீர் குறைவாக செல்கிறது. இதனால், குடிநீர் தட்டுபாடு ஏற்படும். குழாய் விரிசலை சரி செய்ய வேண்டும்.

படிகள் இல்லாத படித்துறை: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூர் வழியாக செல்லும் கட்டளை மேட்டு வாய்க்கால் திருச்சி வரை பாசனத்திற்கு செல்கிறது. இந்த வாய்க்காலில் மக்கள் பயன்பாட்டிற்கு படித்துறை படிகள் கட்டப்பட்டுள்ளன. இதில் வீரவள்ளி பகுதியில் வாய்க்காலில் படித்துறை படிகள் இல்லாமல் வெறுமேன உள்ளன. இதனால் வாய்க்காலில் மக்கள் பெறும் சிரமத்துடன் குளித்து வருகின்றனர். இந்த வாய்க்காலில் புதிதாக படித்துறை கட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்சாலையான தார்சாலையால் அவதி: கிருஷ்ணராயபுரம் அடுத்த வேங்காம்பட்டி வழியாக புதுப்பட்டி மாரியம்மன் கோவில் வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை முதல் கட்டமாக கற்கள் சாலையாக அமைக்கப்பட்டது. அதில் மக்கள் வாகனங்களில் சென்று வந்தனர். தற்போது இந்த சாலை பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இரவு நேரத்தில் வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் பெறும் பாதிப்பு அடைகின்றனர். சாலை மேம்படுத்த பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X