பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் சந்து கடையை அகற்ற வலியுறுத்தி சாலையில் முள்வேலி அமைத்த பொதுமக்கள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

குளித்தலை: வடசேரியில், சந்து கடையில் அதிகளவு குடிமகன்கள் சேர்ந்து மது அருந்துவதை தடுக்கவும், சந்து கடையை நிரந்தரமாக அகற்றிட வலியுறுத்தி கிராம மக்கள், வாலிபர்கள் சாலையில் குறுக்கே அடைத்து கொரோனா பரவலை தடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., காவல்காரன்பட்டி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. கொரோனா வைர ?ஸ தடுக்கும் விதத்தில், 144 ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், வடசேரியில் போலீசார் அனுமதியுடன் சந்துக்கடை செயல்படுவதால், அதிகளவு குடிமகன்கள் கூட்டம் காணப்படுகிறது. கொரோனாவை தடுக்கவும், டாஸ்மாக் சந்துக் கடையை நிரந்தரமாக அகற்றிட வலியுறுத்தியும், கிராம மக்கள் மற்றும் வாலிபர்கள் சார்பில் நேற்று தோகைமலை நெடுஞ்சாலையில் இருந்து, காவல்காரன்பட்டி வழியாக வடசேரி செல்லும் நெடுஞ்சாலை மற்றும் திருச்சி மணப்பாறை தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் தார்ச்சாலை?யை, முள்வேலி போட்டு அடைத்து யாரும் வடசேரி கிராமத்திற்குள் வரக்கூடாது என்பதற்காக சாலையை மறித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X