பொது செய்தி

தமிழ்நாடு

கரூரில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி; நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மெத்தனம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

கரூர்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பணியாளர், உணவு பொருட்களை இறங்கினர்.
கரூர் மாவட்டத்தில், 583 ரேஷன் கடைகள் மூலம், 3 லட்சத்து, 8 ஆயிரத்து,8 13 ரேஷன் கார்டுதார்களுக்கு, பொது விநியோக திட்டத்தில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், மாதந்தோறும், 4,538 டன் அரிசி, 184 டன் கோதுமை உட்பட பல்வேறு உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. கொரோனா வைரஸ் பாதுப்பை தொடர்ந்து தமிழக அரசு சார்பில், அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும், 1,000 ரூபாய் நிவாரணமாக, ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, கரூர் பசுபதி பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருட்கள் வாணிப கழகம் கிடங்குகளில் உணவு பொருட்கள் மூட்டை இறங்கப்பட்டன. இங்கு, நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை இல்லாமல் பொருட்கள் இறங்கியதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு அறிவித்தப்படி பொருட்களை வழங்க வசதியாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் நேற்று காலை முதல் குடோனுக்கு வர தொடங்கி விட்டது. லாரிகள் மூலம் வந்த பொருட்களை இறங்கும் பணியில், 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பொருட்களை கையாளும் போது கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு வழிமுறைகளை தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலத்தில் இருந்து உணவு பொருள்கள் ஏற்றி வந்த லாரிகளுக்கு, கிருமிநாசினி தெளிக்கப்படவில்லை. லோடுமேன்களுக்கு முக கவசம், கையுறை உட்பட எந்த பாதுகாப்பு உபகரணம் அளிக்கப்படவில்லை. அவைகள் அணியாமல் பொருட்களை கையாண்டனர். அண்டை மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவு வருகிறது. இங்கு, பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு நுகர்பொருட்கள் வாணிப கழகம் அதிகாரிகள், முன்னெரிக்கை நடவடிக்கை இல்லாமல் உணவு பொருட்களை இறங்கினர். இதுபோன்ற அலட்சிய போக்கு, அவர்களுக்கு மட்டுமல்லது பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கரூர் மண்டல மேலாளர் பாண்டி கூறியதாவது: மாநில எல்லைகளில், லாரிகளில் கிருமி நாசினி தெளித்து லாரிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கைகள் சுத்தம் செய்வது, முகவசம் ஆகிய சுகாதாரமான முறைகளை மேற்கொள்ள, பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X