பொது செய்தி

தமிழ்நாடு

'சமூக விலகலை' கடைபிடிக்க கலெக்டர் வேண்டுகோள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

கரூர்: அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் நபர்கள், கட்டாயம் 'சமூக விலகலை' கடைபிடிக்க வேண்டும் என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள, 144 தடை உத்தரவை அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல், ஊருக்குள் நடமாடுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நேரிடும். மருந்தகங்கள், ரேஷன் கடைகள், மளிகைக் கடைகள் போன்ற கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லும் நபர்கள் கட்டாயம் 'சமூக விலகலை' கடைபிடிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் குறைந்தது, ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும். அப்போதுதான் பிறரின் மூலம் நமக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தவிர்க்க இயலும். வெளியில் சென்று வீட்டுக்குள் செல்லும்போது, கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிய பிறகே செல்ல வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில், கடையின் முன் ஒரு மீட்டர் இடைவெளியில் கோடு போட்டு வைத்து, அதன்படி வரிசையில் வர வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நகர்ப்புறங்களில் நகராட்சி கமிஷனர், நகர சுகாதார ஆய்வாளர்கள் மூலமும், ஊரகப்பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம பஞ்., தலைவர்கள் ஆகியோர் வாயிலாக, கடைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து, தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர், தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X