பொது செய்தி

தமிழ்நாடு

வெளியில் வந்தால் கடும் நடவடிக்கை: கரூர் கலெக்டர் எச்சரிக்கை

Added : மார் 27, 2020
Share
Advertisement

கரூர்: கட்டாய தனிமைப்படுத்தலில் உள்ள நபர்கள், வீட்டை விட்டு வெளியில் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் கொரோனா தொற்றுள்ள பிற பகுதிகளில் இருந்து, கரூருக்கு வந்துள்ள நபர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு, அனுப்பப்படும் நபர்கள் தொடர்ந்து, 28 நாட்களுக்கு வீடுகளில் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறை, போலீஸ், வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீட்டின் முன் சுகாதாரத்துறையின் சார்பில் 'கொரோனா தொற்று உள்ளே 'நுழையாதே தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்ற விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபரின் பெயர், முகவரி, எந்த நாளில் இருந்து எந்த நாள் வரை தனிமைப்படுத்தப்படுகிறார் என்பன குறித்த விபரங்கள் இருக்கும். இது மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு கட்டாய தனிமைப்படுத்தலில் உள்ள நபர்கள், எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. அவ்வாறு வெளியில் வந்து பிறருக்கு தொற்று ஏற்படும் வகையில் நடந்துகொள்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்கு சென்று வந்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாமல் நபர்கள் குறித்து தகவல் அறிந்தால், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையை, 104 என்ற எண்ணிற்கோ அல்லது 043241077 என்ற எண்ணிற்கோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X