தமிழ்நாடு

தடை உத்தரவை காற்றில் பறக்கவிட்ட மக்கள்: நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை

Added : மார் 27, 2020
Share
Advertisement

நாமக்கல்: அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, வாகனங்களில், சர்வ சாதாரணமாக நகர் வலம் வருகின்றனர். போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழகத்தில், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக, அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. கடந்த, 24 முதல், மாநிலம் முழுவதும், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஐந்து பேர் கூட்டாகவோ அல்லது தனியாகவோ வெளியே செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து மாவட்ட எல்லைகளுக்கும், 'சீல்' வைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அரசின் உத்தரவை மீறி, இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றில் யாராவது வெளியே சென்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதுடன், அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என, எஸ்.பி., அருளரசு உத்தரவிட்டுள்ளார். ஆனால், அவற்றை சட்டை செய்யாமல், வழக்கம் போல், பலரும், இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களில் வலம் வருகின்றனர். 'கொரோனா' வைரஸ் என்ன செய்துவிடும்' என்ற அலட்சியத்தில், உலா வருகின்றனர். இது, தனக்கு வந்தால், தன் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை உணராமல், வெளியே சென்று வரும் நபர்களின் போக்கு, வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குறிப்பாக, மோகனூர் நகரில், அதிக எண்ணிக்கையில், இரு சக்கர வாகனங்களில், மக்கள் சென்று வருவதை சாதாரணமாக பார்க்க முடிகிறது. 'கொரோனா வைரஸ்' தாக்குதலின் விபரீதத்தை எப்போது உணருவார்களோ என்ற கேள்வி எழுகிறது.

அதேபோல், மோகனூர்-வாங்கல் பிரிவு சாலையில், மீன் கடை விரித்து விற்பனை ஜோராக நடந்தது. அதுவும், கும்பலாக நின்று, இறைச்சியை மக்கள் வாங்கிச் சென்றனர். மீன் இறைச்சி வாங்குபவர்கள் இடைவெளி விட்டு நிற்பதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த காட்சி, பலரையும் பீதியடையச் செய்தது. '144' தடை உத்தரவை மீறி, வாகனங்களில் செல்வோர் மீது வழக்குப் பதிவு செய்வதுடன், அந்த வாகனங்களை பறிமுதல் செய்தால் மட்டுமே, மக்கள் நடமாட்டம் குறையும். மேலும், 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்பது போல், மக்களே பார்த்து திருந்தினால் மட்டுமே 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X