பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அலட்சியம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

ராசிபுரம்: காய்கறி கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, கோரிக்கை எழுந்துள்ளது. 'கொரோனா' வேகமாக பரவுவதை தடுக்க நாடு முழுவதும், 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அரசு, தனியார் பஸ்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. சந்தை, உழவர் சந்தைகள் மூடப்பட்டன. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மருந்து, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வந்து வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கண்ட கடைகளும் குறிப்பிட்ட விதிமுறைகள்படி திறக்க வேண்டும் என்றும் போலீசார், வருவாய்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. காலை, 5:00 முதல், 7:00 மணிவரை மட்டுமே காய்கறி கடைகளை பஸ் நிலையத்திற்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், கடை உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி, மற்றும் வாடிக்கையாளர்கள் கும்பலாக கூடாமல், குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்த வேண்டும் எனவும், அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி கடைகள் எதுவும், மேற்கண்ட கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில்லை. பொதுமக்கள் ஆபத்தை உணராமல் கும்பலாக வந்து நின்று கொள்கின்றனர். ஆனால், காலை முதல் மாலை வரை இயங்கும் மருந்து, மளிகை, பால் கடைகளில் இந்த கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, காலையில் மட்டும் திறக்கப்படும் இந்த காய்கறி கடைகளும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X