பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு பிரசாரம்: கிராமங்களில் மும்முரம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. 'கொரோனா வைரஸ்' வேகமாக பரவுவதைத் தடுக்க, மத்திய அரசு கடந்த, 24ம் தேதி இரவு முதல், 21 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய உதவிகள் தேவைப்பட்டால் மட்டும், கடைகளுக்கு வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அதையும் மீறி பொதுமக்கள் விடுமுறையில் சுற்றுவது போல், இயல்பாக பொது இடங்களில் சுற்றி வருகின்றனர். இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில், எச்சரிக்கையும் அதேசமயம், 144 தடை உத்தரவில் எவ்வாறு நடந்து கொள்வது, கொரோனா வைரஸ் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். நாமகிரிப்பேட்டை வட்டாரம் மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில், தமிழக அரசின், '144' தடை உத்தரவை தண்டோரா மூலம் தெரிவித்தனர். இந்த நடவடிக்கைகளில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள், செயலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மீராபாய், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தா, சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், பச்சுடையாம்பாளையத்தில், ஊராட்சி தலைவர் குமார் தலைமையில், துணைத்தலைவர் உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கி, வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு செயலர் அசோகன் ஏற்பாடு செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X