பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : மார் 27, 2020
Share
Advertisement

சேதமடைந்த மைல்கல்: பள்ளிபாளையம் ஒன்றியம், தொட்டிபாளையத்தில் இருந்து, சமயசங்கிலி செல்லும் சாலையின் ஓரிடத்தில் மைல்கல் அமைக்கப்பட்டுள்ளது. இது, புதிதாக வரும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது, இது சேதமடைந்து வாகன ஓட்டிகளின் பார்வைக்கு இல்லாமல் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எனவே, இதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குறுகிய சாலையால் ஓட்டுனர்கள் அவதி: மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்ப மலையில் இருந்து மோர்பாளையம் செல்லும் சாலையில் தினமும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கிச் செல்ல வழியின்றி, வாகனஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். பின்னால் வரும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் ஒதுங்க வழியின்றி, வயல்வெளிகளுக்குள் ஒதுங்கி நிற்க வேண்டிய சூழல் பல வருடங்களாக நீடித்து வருகிறது.

சிறுபாலத்தில் மண் குவியல்: பள்ளிபாளையம் அருகே, ஆவத்திபாளையம் அடுத்த, ராமகிருஷ்ணா நகர் ஓடையில் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் செல்லும் வகையில் பெரிய குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிகளவு மண் குவியல் உள்ளது. சேறும், சகதியுமாக மாறியுள்ளது. மழை அதிகளவு பெய்யும் போது, தண்ணீர் செல்ல தடை ஏற்படும். எனவே, இதை சீரமைத்து, இதன் ஓரப்பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆபத்தான சாக்கடை; பொதுமக்கள் அவதி: ராசிபுரத்தில் இருந்து, சேலம் செல்லும் பிரதான சாலையில் இரண்டு பக்கமும் சாக்கடை அமைந்துள்ளது. இதில் மாதா கோவிலை தாண்டியவுடன் வரும் வளைவில் சாலையை ஒட்டியே சாக்கடை அமைந்துள்ளது. கழிவுகளை அள்ள வசதியாக மேலே போட்டிருந்த கல்லை அகற்றி விட்டனர். தற்போது, கான்கிரீட் சுவர் உடைந்து அகலமாகிவிட்டது. இந்த சாலையில் கவனக்குறைவாக நடந்து செல்லும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி விழுந்துவிடுகின்றனர்.

வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை: எலச்சிபாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டியில் இருந்து, திருச்செங்கோடு செல்லும் நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பீக்ஹவரில், அதிக ஒலியை எழுப்பிக்கொண்டு, அசுரவேகத்தில் செல்வதால், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து, மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X