பொது செய்தி

தமிழ்நாடு

ராசிபுரம் சரகத்தில் 11 பேர் கண்காணிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில், வெளிநாடுகளில் இருந்து வந்த, 11 பேர் போலீசார் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


'கொரோனா வைரஸ்' பரவாமல் தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்கள் குடும்பங்கள் மற்றும் அவர்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராசிபுரம் சரகத்தில் இப்பணியில் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ராசிபுரம் காவல் எல்லையில், ஆறு பேர், வெண்ணந்தூரில் மூன்று பேர், ஆயில்பட்டியில், இருவர் என, 11 பேரை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த மார்ச் முதல் தேதியில் இருந்து, 21ம் தேதி வரை வெளிநாட்டில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், தனித்தனியாக, 'மெடிக்கல் யூனிட்' அமைக்கப்பட்டுள்ளது. இதில், சுகாதார ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட, ஆறு பேர் உள்ளனர். இந்த குழுவினர், வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும், 800க்கும் மேற்பட்டோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து, கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை நேரடியாக விசாரித்து அவர்களது விபரங்களை எழுதி, கதவில் சுகாதாரத்துறையினர் ஒட்டி சென்றுள்ளனர். வெளியூர் சென்றிருந்தாலும் எந்த ஊருக்கு சென்றுள்ளார் என்ற விபரங்களையும் குறிப்பிடுகின்றனர். சீராப்பள்ளி சின்ன காக்காவேரி பகுதியில், வெளிமாநிலத்தில் இருந்து வந்த, ஒன்பது பேரை விசாரித்து, அவர்களிடம் தனிமையாக இருக்கும்படி டவுன் பஞ்., ஊழியர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X