பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 இறுதிதேர்வு: 719 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

Added : மார் 27, 2020
Share
Advertisement

நாமக்கல்: பிளஸ் 2 கடைசி தேர்வான வேதியியல், கணக்குப்பதிவியலில், மாவட்டத்தில், 719 மாணவ, மாணவியர் கலந்து கொள்ளவில்லை.


தமிழகம் முழுவதும், மார்ச், 2ல், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், 197 பள்ளிகளைச் சேர்ந்த, 20 ஆயிரத்து, 383 மாணவ, மாணவியர், 85 மையங்களில் தேர்வு எழுதினர். கடைசி தேர்வு, 24ல் நடந்தது. 'கொரோனா வைரஸ்' பரவல் காரணமாக, அன்றைய தினம், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் காரணமாக, கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பலர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் அன்று நடந்த வேதியியல், கணக்குப்பதிவியர் தேர்வில், 34 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கவில்லை. அதனால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இந்நிலையில், 'தேர்வு எழுத முடியாமல் போன மாணவ, மாணவியருக்கு, மீண்டும் தேர்வு நடத்தப்படும். அதனால், யாரும் கவலைப்பட வேண்டாம்' என, அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்தது. அதன்படி, மாவட்டத்தில், பிளஸ் 2 இறுதித் தேர்வான வேதியியல் பாடத்தை, 14 ஆயிரத்து, 207 பேரில், 13 ஆயிரத்து, 809 பேர் மட்டுமே பங்கேற்றனர். 398 பேர் தேர்வுக்கு வரவில்லை. மேலும், கணக்குப்பதிவியல் தேர்வை, 5,135 பேரில், 4,864 பேர் மட்டுமே எழுதினர். 321 பேர் கலந்து கொள்ளவில்லை. 'அவர்களுக்கான மறு தேர்வை, தமிழக அரசு விரைவில் அறிவிக்கும்' என, மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X