பொது செய்தி

தமிழ்நாடு

உதவிக்கு யாருமில்லாத நபர்கள் தொடர்புக்கு கட்டணமில்லா எண் வெளியீடு

Added : மார் 27, 2020
Share
Advertisement

நாமக்கல்: தமிழத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க, 144 தடை உத்தரவு, கடந்த, 24, மாலை, 6:00 மணி முதல், அமல்படுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட எல்லைகள், 'சீல்' வைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீட்டில் தனியாக உள்ள, உதவிக்கு யாரும் இல்லாதவர்களுக்கு உதவி செய்வதற்காக, கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து, கலெக்டர் மெகராஜ் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 144 தடை உத்தரவு உள்ளதால், வீட்டில் தனியாக உள்ள, உதவிக்கு யாரும் இல்லாத, முதியவர்கள், தங்களுக்கு மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏதேனும் தேவைப்பட்டால், 1077, 82204 02437 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், அதற்கென, பிரத்தியேகமாக உள்ள 91541 54944 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X