நாமக்கல் பூங்கா சாலையில் 78 காய்கறிக் கடைகள் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் பூங்கா சாலையில் 78 காய்கறிக் கடைகள் திறப்பு

Added : மார் 27, 2020
Share
நாமக்கல்: 'கொரோனா வைரஸ்' தொற்றை தடுக்கும் விதமாக, ஏப்ரல், 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.நாமக்கல் உழவர் சந்தை மூடப்பட்டதால், கோட்டை சாலையில் கடை அமைத்து விவசாயிகளும், வியாபாரிகளும் கடை அமைத்து விற்பனை செய்து வந்தனர். அதிகளவில் மக்கள் கூடுவதால் தேவையற்ற நோய்

நாமக்கல்: 'கொரோனா வைரஸ்' தொற்றை தடுக்கும் விதமாக, ஏப்ரல், 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.


நாமக்கல் உழவர் சந்தை மூடப்பட்டதால், கோட்டை சாலையில் கடை அமைத்து விவசாயிகளும், வியாபாரிகளும் கடை அமைத்து விற்பனை செய்து வந்தனர். அதிகளவில் மக்கள் கூடுவதால் தேவையற்ற நோய் பாதிப்பு ஏற்படும். இதனால், நாமக்கல் பூங்கா சாலையில், 78 காய்கறி கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு ஒவ்வோர் கடைக்கும் ஒருவர் நின்று வாங்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் கட்டம் வரைந்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. மேலும், வாகனங்களுக்கு அப்பகுதியில் தடை விதிக்கப்பட்டதால், சாலையின் இரண்டு பக்கமும் தங்குதடையின்றி மக்கள் வந்து செல்கின்றனர். தினமும் காலை, 6:00 மணிக்கு துவங்கி, 9:00 மணிக்கு நிறுத்தப்படுவதால் பொதுமக்களும் நெரிசலின்றி காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X