பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறி வலம், மது விற்பனை: 202 பேர் கைது

Added : மார் 27, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி, நேற்று முன்தினம் சுற்றித்திரிந்த, 70 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று, 94 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்ததாக, இரண்டு நாட்களில், 33 வழக்குகள் பதிவு செய்து, 38 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம், 2,781 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 41 லிட்டர் கள், 80 லிட்டர் சாராய ஊரல் அழிக்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X