பொது செய்தி

தமிழ்நாடு

தடையை மீறிய 12 பேர் மீது வழக்கு

Added : மார் 27, 2020
Share
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் சரகத்தில், 144 தடை உத்தரவை மீறிய 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அதையும் மீறி தினமும் நகர் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களில் வீணாக சுற்றுகின்றனர். டீக்கடை, சாலையோரங்களில், ஐந்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பேசுகின்றனர். இதையடுத்து, நேற்று ராசிபுரம் சரகத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தடையை மீறி சாலையில் சுற்றியவர்கள், கூட்டம் கூடியவர்கள் என, 12 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ராசிபுரம் நகர் பகுதியில், மூன்று இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கடைவீதியில் டி.எஸ்.பி., விஜராகவன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதுகுறித்து, டி.எஸ்.பி., விஜயராகவன் கூறியதாவது: ராசிபுரம் சரகத்தில், 12 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சாலையில் தேவையின்றி வந்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ராசிபுரம் சரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், இவற்றை மிகவும் கண்டிப்பாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X