பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறியதாக 13 வழக்கு பதிவு: 70 பேர் கைது: வாகனங்களை பறிமுதல் செய்ய எஸ்.பி., உத்தரவு

Added : மார் 27, 2020
Share
Advertisement

நாமக்கல்: விதிமீறியதாக, நாமக்கல் மாவட்டத்தில்,13 வழக்குள் பதிவு செய்யப்பட்டு, 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனங்களை பறிமுதல் செய்ய, எஸ்.பி., அருளரசு உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி, சுற்றிப் பார்க்கவோ, வேடிக்கை பார்க்கவோ, இருசக்கர வாகனத்தில் வந்தால், வழக்குப் பதிவு செய்வதுடன், இருசக்கரவாகனமும் பறிமுதல் செய்யப்படும் என, நாமக்கல் எஸ்.பி., அருளரசு எச்சரித்திருந்தார். ஆனால், எச்சரிக்கையும் மீறி, மாவட்டம் முழுவதும், பல்வேறு இடங்களில், இரு சக்கர வாகனங்களில் வலம் வருகின்றனர். அவர்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்ய, எஸ்.பி., உத்தரவிட்டார். அதையடுத்து, மாவட்டம் முழுவதும், விதிமுறை மீறியதாக, 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும் என, போலீசார் தெரிவித்தனர். இது குறித்து, எஸ்.பி., அருளரசு கூறியதாவது: மக்களின் நன்மைக்காகவே அரசு, 144 தடை உத்தரவு அமல்படுத்தி உள்ளது. அவற்றை கடைப்பிடிப்பது நம் கடமை. ஆனால், விதிமுறை மீறி, வாகனத்தில் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை வாகனங்களை பறிமுதல் செய்யவில்லை. இனி, வாகனங்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 'கொரோனா' வைரஸ் தொற்று பரவலை தடுக்க, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X