பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி கடனுக்கான தவணை காலம் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டுகோள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'கொரோனா' வைரஸ் பாதிப்பு வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் லாரி உரிமையாளர்கள் பெற்ற கடன்களுக்கு, ஓராண்டு காலம் தவணை தொகை நீட்டிப்பு வழங்குவதுடன், மூன்று மாதங்களுக்கு, வட்டி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராசாமணி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த, சில ஆண்டுகளாகவே, பல்வேறு காரணங்களால், லாரி தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால், லாரிகளை இயக்க முடியாமல், உரிமையாளர்கள் கதிகலங்கி உள்ளனர். மேலும், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால், அரசு வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், கடன் பெற்று, தவணை தொகையை செலுத்த முடியாமல், லாரி உரிமையாளர்கள் விழிபிதுங்கி உள்ளனர். அதேபோல், இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும், பல லட்சம் குடும்பங்களும், வேலைவாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அவற்றை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், லாரி உரிமையாளர்களின் இன்னல்களை எடுத்துரைத்து, லாரிகளுக்கு வாங்கிய கடனை, ஓராண்டுக்கு தவணை தொகை கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்த வேண்டும். மேலும், மூன்று மாத காலத்திற்கு, தவணை தொகைக்கு, வட்டி கட்டுவதிலிருந்தும் விலக்களிக்கவும், லாரி தொழிலுடன், அதைச் சார்ந்துள்ள பல்வேறு தொழில்களுக்கு, வங்கிகளில் பெற்றுள்ள கடனுக்கான தவணைத் தொகை செலுத்துவதை, ஓராண்டுக்கு விலக்களிக்கவும் ஆவண செய்ய வேண்டும். '144' தடை உத்தரவால், ஆங்காங்கே நிற்கும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு, உணவு, மருத்துவ வசதிகளை செய்துதர, தமிழக முதல்வர், அந்தந்த மாநில அரசை தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X