பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்திற்குள் நுழைய ஊராட்சி நிர்வாகம் தடை

Added : மார் 27, 2020
Share
Advertisement

ராசிபுரம்: வெளிநாடு, வெளிமாநிலத்தில் வசித்து வந்தவர்கள், கிராமத்திற்குள் நுழைய ஊராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க மத்திய அரசு, 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதையடுத்து, வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் வசிப்பவர்கள் அவசர அவசரமாக தங்கள் சொந்த கிராமங்களுக்கு வந்து குவிகின்றனர். இதனால், கிராமங்களில் கொரோனா குறித்த பீதி அதிகமாகிறது. இந்நிலையில் ராசிபுரம் ஒன்றியம் பட்டணம் முனியப்பன்பாளையம் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில், 144 தடை உத்தரவை அடுத்து பட்டணம் முனியப்பன்பாளையம் ஊராட்சிக்குள் வெளிமாநிலத்தவர், வெளிமாவட்டத்தைசேர்ந்தவர் நுழைய அனுமதியில்லை. அவ்வாறு மீறி யாரேனும் வரஇருந்தால், இப்பகுதி கிராமநிர்வாக அலுவலர், ஊராட்சி தலைவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X