பொது செய்தி

தமிழ்நாடு

மோட்டார் உதிரி பாகக்கடைகள் அடைப்பு; விவசாய பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு

Added : மார் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நாமக்கல்: ''கடைகள் அடைப்பு எதிரொலியால், மின் மோட்டார் உதிரி பாகக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதனால், விவசாயப்பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றை தடையின்றி மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, விவசாய சங்கங்களின் தேசிய தலைவர் விருத்தகிரி கூறினார்.
தமிழகத்தில், 'கொரோனா வைரஸ்' தொற்று பரவலை தடுக்க, மாநிலம் முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயப் பணிகள் மேற்கொள்வதற்காக, மோட்டார் உதிரி பாகங்கள், காயில் கட்டும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின், தேசிய தலைவர் விருத்தகிரி கூறியதாவது: ஏப்., 14 வரை, 21 நாட்கள், நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். ஆனால், விவசாயப் பணிகளில், ஆழ்துளை நீர் மின்மோட்டார்கள் இயக்கம் முக்கியமானது. மின் மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனைக் கடைகளும், மோட்டார் காயில் கட்டும் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும், நீர்மின் மோட்டார்கள் பழுது பார்க்கும் பட்டறைகளும் பூட்டப்பட்டுள்ளன. மோட்டார் லிப்டிங் ஆப்பரேட்டர்கள், சரக்கு ஆட்டோ வாகனங்கள் காவல்துறைக்கு பயந்து, கிராமங்களுக்குள் வர மறுக்கின்றனர். அதனால், குறுவை நடவுக்கு நாற்றுவிட்ட விதை நெல் நாற்றங்கால், மின் மோட்டார் பழுதால் காய்ந்து போகின்றன. உழவு செய்த வயல்கள் பாளமாக வெடிக்க ஆரம்பித்து விட்டன. வேளாண் பணிக்கு எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்ள உரிய வழிகாட்டுதல் மிக அவசரமாகவும், மிக அவசியமாகவும் செய்துதர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மார்-202016:17:54 IST Report Abuse
ஆரூர் ரங் இப்போதே குறுவையா? அய்யா கூலி ஆளுக்கு எங்கே போவீங்க,? நிலத்தடி நீரை பாதுகாக்க இலவச மின்சாரம் கொடுக்ககூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X