பொது செய்தி

இந்தியா

வீட்டு கடன் குறையும், 3 மாத இ.எம்.ஐ., இல்லை: ரிசர்வ் வங்கி சலுகை

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
reservebank, rbi, emi, sakthigandhdass, சக்திகாந்ததாஸ், ரிசர்வ்வங்கி,  வீட்டுகடன், ரெபோவட்டி, வங்கிகள்,

புதுடில்லி : வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.47 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், வீடு, தொழில்துறையினருக்கான கடனுக்கான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கியோர், தவணை தொகையை 3 மாதங்களுக்கு செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை தீவிரமாக கவனித்து வருகிறாம். சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜிடிபி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கி ஊழியர் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தும்.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4.9 லிருந்து 4% ஆக குறைக்கப்பட்டது. இதனால், வீடு, வாகன கடனுக்கான வட்டியும், இ.எம்.ஐ., செலுத்தும் மாதங்களும் குறையும் வாய்ப்பு உள்ளது. தொழில்துறையினரின் கடனுக்கான வட்டியும் குறையக்கூடும். வங்கிக்கடனை ஊக்கப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். ஏற்கனவே வங்கிகள் கொடுத்த கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.


latest tamil newsவங்கிகளில் கடன் வாங்கியவர்கள், மாத தவணை வசூல் செய்வதை 3 மாதங்கள் வங்கிகள் ஒத்திவைக்கலாம். இந்த 3 மாதம் அவகாச காலத்தை கடன் பெற்றவர்களின் 'சிபில் ஸ்கோரில்' சேர்க்க கூடாது. தனியார் நிறுவனங்களுக்கான வங்கி கடனுக்கான மாத தவணை 3 மாதம் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
27-மார்-202022:17:23 IST Report Abuse
g.s,rajan But people will become beggars after Corona many of the Would not be alive or available at that stage. g.s.rajan Chennai.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
27-மார்-202021:19:07 IST Report Abuse
அசோக்ராஜ் இங்கே சிலர் மூன்று மாத (வட்டி +அசல்) தள்ளுபடி என்ற அர்த்தம் தொனிக்கும்படி எழுதுகின்றனர். அது சரியில்லை. மூன்று மாத Postponement மட்டுமே செய்யப்பட்டு இருக்கிறது. அந்த 3 மாதங்களுக்கும் வட்டி கணக்கிடப்பட்டு அக்கவுண்டில் சேர்க்கப்படும். வெறும் வாய்தாவுக்கு ஏன் இத்தனை பாராட்டு?
Rate this:
Cancel
Kutti Ravi - coimbatore,இந்தியா
27-மார்-202020:03:52 IST Report Abuse
Kutti Ravi பேங்க் அரசின் இந்த உதவியை niochayam மக்களுக்கு தராது . கடந்த ஆறு வருடங்களில் மத்திய அரசு பல முறை குறைத்திருக்கிறது அனால் சில வங்கிகள் ஒரு பைசா குறைக்கவில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X