கொரோனா தொற்று பரவலில் அமெரிக்கா முதலிடம்: அரசின் மெத்தனமே காரணம்!

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement

வாஷிங்டன்: கொரோனா வைரசால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில், சீனாவை பின்னுக்குத்தள்ளி, முதலிடத்திற்குச் சென்றுள்ளது அமெரிக்கா.


latest tamil news


கொரோனா வைரஸ் தொற்று உலகளவில், 5,31,860 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது; 24,057 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் - 81,782 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலியில் - 80,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த இரு நாடுகளையும் பின்னுக்குத் தள்ளியுள்ள, அமெரிக்காவில் இதுவரை 85,653 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வைரசால் ஏற்பட்ட உயிரிழப்புகளை பொறுத்தவரை, இத்தாலி - 8,215, ஸ்பெயின் - 4,365, சீனா - 3,169, அமெரிக்கா 1,200 உயிர் இழப்புகளை சந்தித்துள்ளன.


latest tamil news


இந்நிலையில், ''கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அமெரிக்கா 'மிகவும் வேகமாக' மீண்டெழும்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று (26ம் தேதி) கருத்துத் தெரிவித்திருந்தார். இருந்தும், உலகிலேயே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளள்ளது.
கொரோனா தொற்றின் மையமாக விளங்கிய சீனா, கடும் உயிரிழப்புகளை சந்தித்து வரும் இத்தாலி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்த, வைரஸ் பாதிப்பின் புதிய மையமாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.


latest tamil news33 லட்சம் பேர் வேலை இழப்பு


கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக அமெரிக்கா முழுவதும் பல்லாயிரக்கணக்கான கடைகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. விமானம், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கார் உள்ளிட்டவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில், 33 லட்சம் மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்.


வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப், ''நாம் செய்து வரும் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். நம் நாட்டு மக்கள் பணிகளுக்கு திரும்ப வேண்டும். நாடும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இது மிகவும் விரைவில் நடக்கும் எனக் கருதுகிறேன்,'' எனத் தெரிவித்தார்.latest tamil news


வேலை இழந்து தவிக்கும் மக்கள், 'அமெரிக்க அரசின் மெத்தனம் தான் கொரோனா தொற்று அதிகரிக்க காரணமாக இருந்துள்ளது' என, குற்றம்சாட்டி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
29-மார்-202007:14:36 IST Report Abuse
Raja எதற்கெடுத்தாலும் அமெரிக்காவ தலைல வச்சு கொண்டாடுறவங்க கவனிக்கணும். அமெரிக்காவ விட மோடி நன்றாகவே செயல்படுகிறார். இவ்வளவு செயல்பட்டும் ஒரு கூட்டம் குறைசொல்லியே பிழைக்கறது. குறைசொல்ற கூட்டத்தை சீனால விடணும்.
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
28-மார்-202009:22:11 IST Report Abuse
Sundar Perhaps this negligence by Mr.Trump may cause him dearly in forthcoming election.
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
27-மார்-202016:59:00 IST Report Abuse
Somiah M யானைக்கும் அடி சறுக்கும் .................................
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
27-மார்-202022:42:46 IST Report Abuse
Rajeshபூனைக்கும் குளிர் அடிக்கும்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X