பொது செய்தி

இந்தியா

துார்தர்ஷனில் மீண்டும் ராமாயணம், மகாபாரதம்

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
ராமாயணம், தூர்தர்ஷன், பிரகாஷ்ஜாவேத்கர், PublicDemand, Ramayan, Air, Doordarshan,

புதுடில்லி : மக்களின் கோரிக்கையை ஏற்று, 1980களில் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி தொடரான ராமாயணம், மகாபாரதம் மீண்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 1987 - 1988ம் ஆண்டுகளில் ஞாயிறு காலை தூர்தர்ஷனில் ராமாயணம், மகாபாரதம் ஒளிபரப்பாயின. அந்த காலகட்டத்தில், இந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்த தொடர் ஒளிபரப்பாகும்நாட்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படும். சில வீடுகளில் மட்டுமே அப்போது டிவி இருந்ததால், அங்கு கூட்டம் நிரம்பி வழியும். 55 நாடுகளில் 65 கோடி பேர் அந்த நேரத்தில் அந்த தொடர்களை பார்த்தனர்.


latest tamil newsஇந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் மக்கள் முடங்கியுள்ளனர். இதனையடுத்து ராமாயணம் தொடரை மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என டுவிட்டர் மூலம் ஏராளமான மக்கள் கோரிக்கை விடத்துவங்கினர். இது குறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியது.


latest tamil newsஇதனை ஏற்று இத்தொடர்களை நாளை (மார்ச் 28) முதல் தினமும் இரு முறை துார்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: மக்களின் கோரிக்கையை ஏற்று, நாளை முதல் ராமாயணம் தொடர், தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன். மார்ச் 28 சனிக்கிழமை முதல் தூர்தர்ஷனில் காலை 9 முதல் 10 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
28-மார்-202009:25:32 IST Report Abuse
arudra1951 மிக்க மகிழ்ச்சியோடு இந்த திட்டத்தை வரவேற்கிறேன் .இளைஞர்கள் மறந்துபோன அவர்கள் பின்பற்றவேண்டிய பொக்கிஷமான கருத்துகள் கொண்ட மஹாபாரதம் மீண்டும் ஒளி பரப்பட வேண்டும் .ஸ்ரீராமஜெயம் .மேரா பாரத மஹான்
Rate this:
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-மார்-202020:37:17 IST Report Abuse
Sriram V Congress MP jothimani is upset in teleing serial. Because she is apprehensive that they cannot spoil the society with dirty serials run by DMK / Congress families. Karur people must protest against her. They should boycott all her program.
Rate this:
Share this comment
Cancel
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
27-மார்-202020:03:43 IST Report Abuse
M.P.MADASAMY சாலைகளில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க இப்படி ஒரு உத்தியா ?அந்த தொடர்களில் சங்கு ஊதுகிற சீனெல்லாம் வருமே.பரவாயில்லையா.எரியுற வீட்டில பிடுங்கின வரைக்கும் லாபம்.
Rate this:
Share this comment
mindum vasantham - madurai,இந்தியா
27-மார்-202020:33:22 IST Report Abuse
mindum vasanthamsila healerkal ippothu veli varalaame...
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
27-மார்-202020:56:44 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுஇப்பொழுது ஒளிபரப்பாகும் சீரியல், திரைப்படங்களில் நீங்கள் குறிப்பிடும் சங்கு ஊத்துகிற காட்சிகள் இல்லையா? ராமாயணம் போன்ற புரோகிராம்களை விளம்பர வருமானம் கூட கிடைக்காது எனும்போது எரிகிற வீட்டில் என்ற சொல்வழக்கு எப்படிப் பொருந்தும்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X