கன்டெய்னருக்குள் பயணிகள் பதுங்கி சென்ற பரிதாபம்

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
LockDown, MigrantWorkers, ContainerTruck, Maharashtra,  கன்டெய்னர், 300பேர், பதுங்கல், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ராஜஸ்தான்

மும்பை: தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தேசிய நெடுச்சாலை வழியாக மஹாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைய முயன்ற இரண்டு கன்டெய்னர் லாரிக்குள் 300 பேர் பதுங்கி இருந்தது போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது.


latest tamil news


கொரோனா வைரஸ் பரவுதல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய போக்குவரத்து தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால், வெளியூரில் தங்கியிருந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தெலுங்கானாவில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடிவெடுத்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த இரண்டு கன்டெய்னர் லாரிகளில் ஏறி சென்றனர்.


latest tamil news


மஹாராஷ்டிரா எல்லை மாவட்டமான யவட்மால் பகுதியில் போலீசார் சோதனை நடத்தி வந்தனர். அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளையும் நிறுத்திய போலீசார், டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த டிரைவர்களால் போலீசார் சந்தேகமடைந்தனர்.
இதனையடுத்து கன்டெய்னரை திறந்து பார்த்த போது, உள்ளே 300க்கும் மேற்பட்டோர் பதுங்கி இருந்ததை கண்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், டிரைவர்களை கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
28-மார்-202016:45:12 IST Report Abuse
Krishnamurthy Venkatesan வெளிநாடுகளீல் வேலை செய்யும் இந்தியரை கொண்டுவர முயற்சி எடுக்கும் மத்திய அரசு உள்நாட்டிலேயே வேலை செய்யும் மற்ற மாநிலத்தவரை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்ப முயற்சி செய்திருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது.
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
28-மார்-202019:08:25 IST Report Abuse
Pannadai Pandianதலை இருக்கு கருத்து சொல்ல ஆனால் சாத்தியமா ??? பொறுப்பா கருத்து போடுங்க.......
Rate this:
Cancel
Tamil - chennai,இந்தியா
27-மார்-202022:22:30 IST Report Abuse
Tamil வடநாட்டினர் அவர்கள் மாநிலத்துக்கு அனுப்பாமல் தேவையில்லாமல் இங்கு தங்கவைக்க வேண்டாம். அவர்களுக்கு தேவையான போக்குவரத்து ஏற்பாடு செய்து அவர்கள் சொந்த மாநில அரசிடம் ஒப்படைக்கவேண்டும். குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கும் அவர்களை இங்கு வைத்து கொடுமை படுத்துவது தவறு . மனிதநேயமாக அவர்களை சொந்த ஊர்களுக்கு செலவுக்காக சிறிது பணமும் தந்து அனுப்பிவைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். அவரக்ளுது குடும்பத்துடன் சிறிது காலம் இருக்க வழிவகை செய்யப்படவேண்டும்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
27-மார்-202018:46:01 IST Report Abuse
Rajas பாவம் இந்த மக்கள், வேலை செய்ய போன மாநிலத்தில் வேலை இல்லை, பணம் இல்லை. எப்படி வாழ்வார்கள். எப்படியாவது தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல துடிப்பது இயல்பு தான். வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் இங்கே வர விரும்பினால் அதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் மத்திய அரசு இவர்களை கண்டு கொள்வதில்லை. அவர்கள் தான் அப்படி என்றால் சம்பந்தப்பட்ட மாநிலங்களும் தங்களுடைய மக்களை கண்டு கொள்வதில்லை. இந்த தொழிலாளர்கள் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அவர்களுடைய மாநிலங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் பணத்தால் உள்ளூரில் கொழிக்கும் மாநிலங்கள் இந்த தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்று உண்டானால் அமைதியாகி விடுகின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X