பொது செய்தி

இந்தியா

கேரளாவை கதறவிடும் கொரோனா: கண்காணிப்பில் ஒரு லட்சம் பேர்

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement

திருவனந்தபுரம்: தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.02 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில், 19 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news
கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

கேரளாவில், கொரோனா வைரஸ் தொற்றால் 137 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 11 பேர் குணமடைந்துள்ளனர். இப்போது சிகிச்சையில், 126 பேர் உள்ளனர். ஒரு லட்சத்து இரண்டாயிரத்து மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அதில், 601 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news
கேரளத்திலிருந்து படிப்புக்காகவும் வேலைக்காகவும் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்கள், இங்கு வரவேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் பயணம் செய்ய சாத்தியம் இல்லாமல் உள்ளது. நீங்கள் இருக்கும் இடத்திலேயே முன்னெச்சரிக்கையுடன் இருங்கள், அரசு உங்களுடன் இருக்கும்.

கேரளத்தில் ரேஷன் கார்டு பெறாத, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆதார் எண் ஆய்வு செய்யப்பட்டு உணவுப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.latest tamil news
'வெளி மாநில மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லுமாறு கேரள அரசு கட்டாயப்படுத்தியதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்பதை நிரூபிக்கும் வகையில், கேரளத்தில் ரேஷன் அட்டை இல்லாத, வெளி மாநிலத்தவருக்கும் ரேஷனில் பொருட்கள் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குறியது' என, சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவிக்கும் நெட்டிசன்கள், 'கேரளாவில் ஒரு லட்சம் பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதால், மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவுதான் கேரளத்தின் அண்டை மாநிலமான தமிழகத்தை பாதிப்பிலிருந்து காத்துள்ளது' என, மத்திய அரசிற்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
28-மார்-202004:42:27 IST Report Abuse
வாய்மையே வெல்லும் கடந்த காலங்களில் ஆணவம் கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் வேண்டுமென்று பசுமாட்டை அறுத்து உண்பது / மற்றும் அசுப காரியங்களில் ஈடு பட்டுக்கொண்டனர்..இதனால் இன்று ஈசனின் திருவிளையாடல் அவர்களுக்கு பாடம் புகட்டும் நேரம் இது..
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
28-மார்-202012:48:40 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுநல்ல கருத்து...
Rate this:
chenar - paris,பிரான்ஸ்
28-மார்-202017:47:54 IST Report Abuse
chenarபசுமாட்டை அறுத்து உன்ன இந்திய மக்களுக்கு கற்றுக்கொடுத்ததே பிராமணர்கள் தான் நெஞ்சில் துணிவிருந்தால் விவாதிப்போம்...
Rate this:
Cancel
chenar - paris,பிரான்ஸ்
28-மார்-202000:58:08 IST Report Abuse
chenar மனித நேயமற்றவர்கள்
Rate this:
Cancel
sri - mumbai,இந்தியா
27-மார்-202021:32:02 IST Report Abuse
sri எலக்ட்ரானிக்ஸ் கழிவு , கசாப்புக்கடை கழிவு என்று எல்லா கழிவுகளையும் தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் கொண்டு வந்து மறைவாக போட்டுவிட்டு தங்களை பெரிய புத்திசாலிகள் என்று நினைத்திருக்கும் கேரளா மாநிலத்தில் , அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது இயற்கையின் சிரிப்பு என்றுதான் எண்ணவேண்டியிருக்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X