புதுடில்லி: கொரோனா பாதிப்பில் இருந்து காக்கும் வகையில் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழில்துறையினருக்கு உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரெப்போ விகிதம் குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நமது பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ் வங்கி மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பு, பணப்புழக்கத்தை அதிகரிப்பதுடன் நிதி செலவை குறைக்கும். நடுத்தர வர்க்கத்தின் வணிக தொழில்துறையினருக்கு உதவும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Today @RBI has taken giant steps to safeguard our economy from the impact of the Coronavirus. The announcements will improve liquidity, reduce cost of funds, help middle class and businesses. https://t.co/pgYOUBQtNl
— Narendra Modi (@narendramodi) March 27, 2020